பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தத்கல் முறையில் பிப். 17 முதல் புதன்கிழமை (பிப்.19) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்வுத் துறையில் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, இப்போது விண்ணப்பிக்க விரும்புவோர் தத்கல் அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்குச் சென்று தனித்தேர்வர்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
வேறு இடங்களில் இருந்து ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாது. இந்த சிறப்பு மையங்கள் தொடர்பான விவரத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மண்டலத் தேர்வு துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.
வழக்கமான தேர்வுக்கட்டணமான ஒரு பாடத்துக்கு ரூ.85, நேரடித் தனித்தேர்வர்களுக்கு ரூ.187 கட்டணங்களுடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000-ஐ பணமாக மட்டுமே சிறப்பு மையத்தில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்கள் ("எச்'வகையினர்), தேர்வுக் கட்டணத்துடன் சான்றொப்பமிடப்பட்ட மதிப்பெண் நகல், பள்ளித் தலைமையாசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவராக பதிவு செய்து தேர்வு எழுதாதவர்கள் மட்டும்), செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங்களைத் தேர்வு எழுதுவோர் மட்டும்), ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றோடு சிறப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும்.
நேரடி தனித்தேர்வர்கள் ("எச்பி' வகையினர்), தேர்வுக் கட்டணத்துடன் பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல், இடம்பெயர்வு சான்றிதழ் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்), ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் செல்ல வேண்டும்.
இவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும். இந்தத் தேர்வர்களுக்கான தேர்வு மையம் அந்தந்த மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் என என தேவராஜன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment