Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 10 January 2014

தபால்தலைக் கண்காட்சி: பள்ளி மாணவர்களிடமிருந்து தபால்தலைகள் வரவேற்பு

மாவட்ட அளவிலான தபால்தலைக் கண்காட்சி வரும் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்தக் கண்காட்சியில் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் சேகரித்து வைத்துள்ள தபால்தலைகள் மட்டும் பிரத்யேகமாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்களிடம் இருந்து தபால்தலைகள் வரவேற்கபடுகின்றன. இது குறித்து சென்னை தபால்துறைத் தலைவர் வெளியிட்ட செய்தி:
இந்திய தபால்துறை, "சென்ஸ்பெக்ஸ் - 2014' என்ற பெயரில் தபால்தலைக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்தலைகளைக் காட்சிக்கு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் சேகரித்து வைத்துள்ள தபால்தலைகள் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
இதில் பங்கேற்று தங்கள் தபால்தலைகளைக் காட்சிப்படுத்த விரும்பும் மாணவர்கள், தங்களின் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், மற்றும் முகவரி ஆகியவற்றை "தலைமை தபால்துறை அதிகாரி, கண்காட்சிக் குழு, "சென்ஸ்பெக்ஸ் - 2014', அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம், சென்னை - 600 002' என்ற முகவரிக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களுடன் பள்ளி அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பள்ளி மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் தங்களது தபால்தலைகளை வரும் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 - 28520926, 28543199 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: