சென்னைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் (டான்செட்) பங்கேற்றிருப்பது கட்டாயம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை தொடர்ந்து "டான்செட்' அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வந்தபோதும், மாணவர்களிடையே மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2014-ஆம் ஆண்டுக்கான "டான்செட்' தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் வரும் மார்ச் 22-ஆம் தேதியில் நடத்தவுள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் பங்கேற்றவர்கள் மட்டுமே சென்னைப் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியும். இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Eligibility (MBA, MCA, M.E./M.Tech./M.Arch./M.Plan.)
Information and Instructions to Candidates
Advertisement
Eligibility (MBA, MCA, M.E./M.Tech./M.Arch./M.Plan.)
Information and Instructions to Candidates
No comments:
Post a Comment