சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும் என பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டம் 2013 Act-ன் படி வரும் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழக தொழிற்படிப்புகளான பொறியியல், மருத்துவம், பல்மருத்துவம், வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை தமிழ்நாடு அட்மிஷன் இன் புரபஷனல் எஜூகேஷனல் இன்ஸ்ட்டியுஷன்ஸ் ஆக்ட் 2006-ன் (Tamil Nadu Admission in Professional Institutions Acy-2006) படி தமிழ்நாடு அரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும். மேலும் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் இந்த கல்வியாண்டில் இதுவரை 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
No comments:
Post a Comment