புதுவை மாநில சமூக நலத்துறை சார்பில் 14977 மாணவ, மாணவியருக்கு ரூ.42 லட்சம் செலவில் மழைக்கோட்டுகள் விநியோகம் செய்யப்படும் என நலத்துறை பெ.ராஜவேலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மழைக்கோட்டு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் 197 பேருக்கு மழைக்கோட்டுகளை வழங்கி பேசியது: முதல்வர் ரங்கசாமி உத்தரவின்படி மாணவிகளுக்கு மழைக்கோட்டுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டுக்கு ரூ.42 லட்சம் செலவில் 14977 பேருக்கு மழைக்கோட்டுகள் வழங்கப்படும்.நடப்பாண்டு 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மழைக்கோட்டுகள் வழங்கப்படும் என்றார் ராஜவேலு.சமூக நலத்துறை செயலர் கு.உத்தமன், உதவி இயக்குநர் ரா.சாந்தி, துணை முதல்வர் சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment