Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 23 October 2013

UGC - இளங்கலை பட்டதாரிகளுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப்

முதுநிலை பட்டப் படிப்பு கல்வி உதவித் தொகைக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அங்கீகாரம் பெற்ற பல்கலையில் அல்லது கல்லூரியில் 2013-14 கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.
இளநிலைப் பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்கள் இந்த 2013-15 ஆம் ஆண்டு கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்  (அக்.,22) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.ugc.ac.in/urh என்ற இணையதளத்தில் நவம்பர் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்படிப்பு கல்வியை தவிர மற்ற மாணவர்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் யுஜிசி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு http://www.ugc.ac.in/ugc_notices.aspx என்ற இணையதளத்தை அணுகலாம்.

No comments: