கடந்த டிசம்பரில், 2,000 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்கள், பணி நியமனமும் செய்யப்பட்டு விட்டனர். கோர்ட் வழக்கு காரணமாக, தாவரவியல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்த பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 204 பணியிடங்களில், 195 பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை, நேற்று முன்தினம், டி.ஆர்.பி., தனது அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிட்டது. மீதியுள்ள பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட இன சுழற்சியில், தகுதியான தேர்வர்கள் கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது.
வழக்கமாக, எந்த ஒரு தேர்வு பட்டியலாக இருந்தாலும், உடனடியாக, www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்படும். இம்முறை, இணையதளத்தில் வெளியிடாததால், தேர்வு முடிவை அறிய முடியாமல், தேர்வர்கள் தவித்தனர்.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "சர்வர்" பிரச்னை காரணமாக, இணையதளத்தில், தேர்வு முடிவை வெளியிட முடியவில்லை. ஓரிரு நாளில், இணையத்தில், வெளியிடப்படும் என, தெரிவித்தன.
No comments:
Post a Comment