Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 23 April 2015

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதற்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் உள்ள 3,298 மையங்களில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 75 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிள்ஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி காலை 10 மணிக்கும், +2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

No comments: