துணைவேந்தர் நியமனத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக் குழு) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யு.ஜி.சி. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, கூறியதாவது:-
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்துக்கு பதில் கிடைத்ததும், யு.ஜி.சி. விதிமுறைகளைப் பின்பற்றாத தமிழக பல்கலைக்கழகங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment