தமிழக அரசின் 19 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 11 முதல் 28ம் தேதி வரை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் கிடைக்கும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29ம் தேதி கடைசி நாள். ஜூன் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். கடந்த ஆண்டு போல் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன; அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 383 இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 இடங்கள் கிடைக்கும். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
ஓமந்தூரர் அரசு மருத்துக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் - எம்.சி.ஐ., அனுமதி 15ம் தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு 10ம் தேதி வெளியிடப்படும்.
No comments:
Post a Comment