வரும் கல்வியாண்டில் (2015-16) 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை 25 சதவீதம் முதல் 250 சதவீதம் வரை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புத்தகங்களுக்கான காகித விலை, அச்சடிக்கும் கட்டணம், நிர்வாகச் செலவுகள் அதிகரிப்பு போன்றவற்றைத் தொடர்ந்து புத்தகங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டுக்காக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இதில் 3.17 கோடி புத்தகங்கள் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் ஆகும்.
1.35 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கானவை. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களின் விலையை அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம்:
புத்தகங்களை அச்சிடுவதற்கான காகித விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தனியார் பள்ளிகளுக்கு விற்கப்படும் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பரிந்துரை வழங்கியுள்ளார்.
அவரது பரிந்துரையை ஏற்று, புத்தகங்களின் விலை அதிகரிக்கப்படுகிறது.
முப்பருவ முறையின் கீழ் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான
பாடப் புத்தகங்களின் விலை விவரம்
பழைய விலை புதிய விலை
முதல் வகுப்பு தொகுதி -1 ரூ. 30 ரூ. 40
தொகுதி-2 ரூ. 30 ரூ. 50
இரண்டாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 30 ரூ. 50
தொகுதி-2 ரூ. 35 ரூ. 50
மூன்றாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 30 ரூ. 40
தொகுதி-2 ரூ. 60 ரூ. 90
நான்காம் வகுப்பு தொகுதி-1 ரூ. 30 ரூ. 50
தொகுதி-2 ரூ. 60 ரூ. 90
ஐந்தாம் வகுப்பு தொகுதி -1 ரூ. 35 ரூ. 50
தொகுதி-2 ரூ. 65 ரூ. 90
ஆறாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 40 ரூ. 60
தொகுதி-2 ரூ. 65 ரூ. 100
ஏழாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 45 ரூ. 70
தொகுதி-2 ரூ. 95 ரூ. 140
எட்டாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 55 ரூ. 90
தொகுதி-2 ரூ. 110 ரூ. 160
ஒன்பதாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 60 ரூ. 80
தொகுதி-2 ரூ. 50 ரூ. 70
தொகுதி-3 ரூ. 90 ரூ. 120
பத்தாம் வகுப்பு
தமிழ் ரூ. 85 ரூ. 110
ஆங்கிலம் ரூ. 85 ரூ. 90
கணிதம் ரூ. 85 ரூ. 160
அறிவியல் ரூ. 85 ரூ. 170
சமூக அறிவியல் ரூ. 85 ரூ.130
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ்ப் புத்தகங்களின் விலை
1 முதல் 4-ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களின் விலை
ரூ. 60 என்பதில் மாற்றமில்லை.
5-ஆம் வகுப்பு ரூ. 60 ரூ. 70
6-ஆம் வகுப்பு ரூ. 65 ரூ. 90
7-ஆம் வகுப்பு ரூ. 65 ரூ. 100
8-ஆம் வகுப்பு ரூ. 65 ரூ. 110
9-ஆம் வகுப்பு ரூ. 70 ரூ. 140
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களின் விலை 250 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment