Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 29 March 2015

TRB: 1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,746 பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 1,025 பேருக்கு அவர்களது மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 721 ஆசிரியர்களுக்கு வேறு மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இவர்கள் அனைவரும் திங்கள்கிழமையே பணியில் சேருமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேர்வுப் பட்டியல் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

No comments: