2015-16 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடியும், உயர்கல்விக்கு ரூ.3,696 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர் செல்வம், மார்ச் 25ம் தேதி(இன்று) சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அதில் கல்வித்துறை மற்றும் மாணவர் நலனுக்காக நிதியாதாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரங்கள் வருமாறு,
* பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு - ரூ.20,936.50 கோடிகள்
* உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு - ரூ.3696.82 கோடிகள்
* பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த - ரூ.450.96 கோடிகள்
* பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், 4 செட் சீருடை, புத்தகப் பை, செருப்பு, ஜியோமெட்ரி பாக்ஸ், அட்லஸ் மேப், கிரயான்ஸ், கலர் பென்சில், உல்லன் ஸ்வெட்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்க - ரூ.1037.85 கோடிகள்
* 6.62 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வாங்க - 219.50 கோடிகள்
* மதிய உணவு திட்டத்திற்கு - 1470.53 கோடிகள்
உயர்கல்வி
* பட்டப் படிப்பை மேற்கொள்ளும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க - 569.65 கோடிகள்
* அண்ணாமலைப் பல்கலைக்கு நிதியுதவி அளிக்க - 110.57 கோடிகள்
இதர அம்சங்கள்
* விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்ந்த துறைக்கு 149.70 கோடிகள்
* பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு - 140.12 கோடிகள்
* மாநிலத்தில் எஞ்சியுள்ள 12,609 அங்கன்வாடி மையங்களுக்கு, கேஸ் இணைப்பு கொடுக்கப்படும்.
* மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க - 1,100 கோடிகள்
* ப்ரீ-மெட்ரிக் மற்றும் போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகை வழங்க - முறையே ரூ.56.37 கோடிகள் மற்றும் ரூ.674.98 கோடிகள்
* ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் உணவு செலவினங்களுக்காக - ரூ.102.79 கோடிகள்
* ஆதிதிராவிட மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகளை மேம்படுத்த - ரூ.162.91 கோடிகள்.
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக - ரூ.364.62 கோடிகள்
* 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். அதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment