ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் தகவல் மையம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள், பணி நியமனங்கள் தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்களை இந்தத் தகவல் மையத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஈ.வெ.கி. சம்பத் மாளிகையின் தரைத்தளத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வர்கள், பொதுமக்களுக்கு இருக்கை வசதி, தேர்வு முடிவுகளைப் பார்வையிடும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தை 044-28272455, 7373008134 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment