Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 20 January 2015

TRB-TET 2013 தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டி.ஆர்.பி.,யால், 2012 - 13ல் நடத்தப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து, பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டனர்.
சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களின் சான்றிதழ்கள் மட்டும், பதிவிறக்கம் செய்யப்பட்டு, தேர்வர்கள், தேர்வு எழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட, முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேரில் அணுகி, பிப்., 14ம் தேதி வரை, அனைத்து வேலை நாட்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
டி.இ.டி., 2013 தேர்வில், குறைந்தபட்சம், 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: