தமிழகத்தில் சுமார் 10-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மெட்ரிக் பள்ளிகளும் அடங்கும்.
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடைபெற்று வருகின்றன. ஆனால், விதிகளின் படி, ஏப்ரல் மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கும் அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
எந்த மெட்ரிக் பள்ளியிலும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக மாணவர் சேர்க்கை தொடங்கக் கூடாது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஏப்ரல் 4-ஆம் தேதிக்குப் பிறகே நடைபெற வேண்டும். விண்ணப்பப் படிவங்களும் அதன் பிறகுதான் வழங்கப்பட வேண்டும்.
அதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கினால் அந்தப் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment