Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 30 November 2014

அனுமதியின்றி மேற்படிப்பு படித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

முன் அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்து ஊக்க ஊதியம் வழங்கக்கோரும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தொடக்கக்கல்வி இயக்குநரகத் தின் கீழ் பணிபுரியும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்து ஊக்க ஊதியம் வழங்கக் கோரும் பட்சத்தில் அத்தகைய ஆசிரியர்கள் மீது மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த ஒழுங்கு நடவடிக்கையின் இறுதி உத்தரவு நகலுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர், துறை முன்அனுமதி பெறாமல் படித்த உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி கோரும் கருத்துருக்களை உரிய விவரங்களுடன் இயக்குநரகத்துக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

1 comment:

அன்பே கடவுள் said...

As same that without prior permission from departmental head, getting housing loan and constructed that house. Again he deducts interest for the housing loan in the income tax calculation? Is it correct? can DDo permit this? kindly explain. Arul