பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்)மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.
இதற்காக www.ugc.ac.in என்ற இணையதளத்தில் 10 கேள்விகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதாவது, உயர்கல்வி ஆசிரியரை அடையாளம் காண நெட் தேர்வு போதுமானதாக உள்ளதா?
தேர்வில் பங்கேற்க வயது வரம்பு கொண்டுவர வேண்டுமா? இந்தத் தகுதித் தேர்வில் ஒருவர் இத்தனை முறைதான் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமா? தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டுமா? என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இதற்கு ஆம்/இல்லை என இரு பதில்களை நம்மால் சுட்ட முடியும். மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்தக் கேள்விகளுக்கு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு யுஜிசி கேட்டுக் கொண்டடுள்ளது.
இந்தக் கருத்துகள் மற்றும் குழு முடிவுகளின் அடிப்படையில் நெட் தகுதித் தேர்வில் மாற்றம் கொண்டுவரப்படும்.
டிசம்பர் மாதம் நடத்தப்படும் தேர்வில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது என்று யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment