தமிழக அரசின் சிறந்த நூல் விருதுக்கு விண்ணப்பிக்க, ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2013-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்களுக்கான பரிசுப் போட்டி 33 வகைப்பாடுகளில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரம், பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தமிழ் வளர்ச்சி இயக்ககத்துக்கு அனுப்புவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.
No comments:
Post a Comment