தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
பொதுப்பணித் துறையில் சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் பிரிவில் உதவி பொறியாளர்கள், தொழிற்சாலைகள் பாதுகாப்பு உதவி இயக்குநர் உள்பட மொத்தம் 98 உதவிப் பொறியாளர் அளவிலான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.இந்தத் தேர்வில் பங்கேற்க 54,690 பேர் விண்ணப்பித்தனர். இதில் 1,135 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 53,555 பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.இவர்களில் 31 ஆயிரத்து 631 பேர் (60 சதவீதம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில் பங்கேற்றதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment