தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -1 தேர்வுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு, மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடைபெற்றது. காலை பத்து மணிக்கு தொடங்கிய இந்த தேர்வினை, தமிழகம் முழுவதும் உள்ள 557 மையங்களில், ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர்.
சென்னையில் மட்டும் 108 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் நடைபெற்ற தேர்வினை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தேர்வு மையங்கள் வெப் காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டன. இதுதவிர, பிற மாவட்டங்களில் துணை ஆட்சியர் தலைமையிலான பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment