Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 23 July 2014

அரசு எம்.பி.பி.எஸ்.: அனைத்து இடங்களும் நிரம்பின

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களிலும் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மறு ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கிடையே மாறுதல், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் என அனைத்து அரசு மருத்துவக் கல்லூரியின் இடங்களும் நிரப்பப்பட்டன. சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியின் 65 அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

150 சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: மறு ஒதுக்கீடு காரணமாக முதல் கட்ட கலந்தாய்வில் இடம்பெற்ற சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
45 அரசு பி.டி.எஸ். இடங்கள்: எம்.பி.பி.எஸ். மறு ஒதுக்கீடு கலந்தாய்வு காரணமாக சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் பி.டி.எஸ். காலியிடங்களின் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் மறு ஒதுக்கீடு, 45 அரசு பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 1,020 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்பும் பணி தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

No comments: