Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 18 July 2014

கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பு

கோவையில் வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ள ராணுவ கல்வி படைப்பிரிவில் அவில்தார் கல்விப் பணி ஆள்சேர்ப்பு முகாமில் விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவையில் வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆள்சேர்ப்பு முகாமில் 20 வயது பூர்த்திடைந்து 25 வயதுக்கு மிகாமல் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பட்டதாரி படிப்பு படித்துள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
இதற்கான எழுத்துத் தேர்வு கோவையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதிக்குள் அனுப்ப கடைசி நாளாகும்.
இதுதொடர்பாக மேலும் விவரங்கள் பெற கோவையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் (0422-2222022) தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

No comments: