பி.எஃப்.எஸ்சி. எனப்படும் மீன்வளப் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்.
www.tnfu.org.in மற்றும் www.tnfu.org.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய தரவரிசையை அறிந்துகொள்ளலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அவர்களுக்கான அழைப்புக் கடிதம் ஜூலை மூன்றாம் வாரத்தில் அனுப்பப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பி.எஃப்.எஸ்சி. படிப்பிற்காக இந்தாண்டு விண்ணப்பித்த ஆயிரத்து 672 மாணவர்களில் ஆயிரத்து 604 பேர் தகுதிபெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு வரை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வந்தது. மீன்வளத்திற்கான புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதால் இந்தாண்டு முதல் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தால் தனியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment