அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள பி.எட். இடங்கள், இந்த ஆண்டு முதல் முறையாக பொறியியல் படிப்பைப் போன்று ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொது கவுன்சலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆன்லைனில் விண்ணப் பிக்க கடைசி தேதி திங்கள் கிழமையுடன் (28-ந் தேதி) முடிவடைந்தது. இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் அண்மையில்தான் வெளியிடப்பட்டன. அந்த மாணவர்களும் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க வசதியாக கடைசி தேதியை ஆசிரியர் பல்கலைக்கழகம் 31-ம் தேதி (வியாழக்கிழமை) வரை நீட்டித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 31 வரை விண்ணப்பிக்கும் மாணவர்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், அசோக்நகர் ஸ்டெல்லா மெட்டிட்டியூடினா கல்வியியல் கல்லூரி ஆகிய 3 மையங்களில் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment