யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சமீபத்தில்,ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், யுபிஎஸ்சி தேர்வு குறித்து மாணவர்களின் தொடர் போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பணியாளர் நலன் அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வின் முறையை, மாணவர்களின் கோரிக்கைக்கிணங்க மாற்றியமைப்பது குறித்து ஆராய மூன்று சிறப்புக் குழுக்களை அரசு நியமித்துள்ளது.
இதன்படி, கிராமப்புற மாணவர்களும் யுபிஎஸ்சி தேர்வை எளிதில் கையாளும் வகையில் மாற்றி அமைக்கப்படும். இந்த மாற்றம் ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment