Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 23 July 2014

ஆக.5 இல் கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங்

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆக.5 ஆம் தேதி நடைபெறுகிறது.
 கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின்கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு மதுரையில் உள்ள கள்ளர் பள்ளி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆக.5 ஆம் தேதி நடைபெறுகிறது.

 காலை 9.30 மணி முதல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் என்ற வரிசைப்படி மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து தமிழாசிரியர், பட்டதாரி ஆசிரியர், விடுதிக் காப்பாளர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.
 பிற்பகல் 1.30 முதல் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, இடைநிலை ஆசிரியர், இடைநிலை காப்பாளர், சிறப்பு ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். முன்னுரிமை உள்ளோர் உரிய சான்றுகளுடன், கலந்தாய்வுக்கு முன்னதாகச் சமர்ப்பிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments: