Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 21 July 2014

கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் சி.பிரீத்தி, எல்.கார்த்திகேயன், வி.கே.வருண் ஆகிய மூன்று பேரும் 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது.
தகுதியுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் www.tanuvas.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகிய மூன்று படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு இக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இதில் பி.வி.எஸ்.சி. படிப்புக்கு மொத்தம் 14,571 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவற்றில் 14,293 விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு விண்ணப்பிக்கப்பட்ட 2,521 விண்ணப்பங்களில் 2,314 விண்ணப்பங்களும், கோழியின உற்பத்தி படிப்புக்கு விண்ணப்பிக்கப்பட்ட 1,606 விண்ணப்பங்களில், 1,471 விண்ணப்பங்களும் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
எவ்வளவு இடங்கள்: ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பை (பி.வி.எஸ்சி.) பொருத்தவரை சென்னை (120 இடங்கள்), நாமக்கல் (80), திருநெல்வேலி (40), ஒரத்தநாடு (40) ஆகிய பகுதிகளில் உள்ள 4 கல்லூரிகளில் மொத்தம் 280 இடங்கள் உள்ளன. இதில் மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கு 48 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளியில் உள்ள கல்லூரியில் நான்கரை ஆண்டு பி.டெக். (எஃப்.டி.-உணவுத் தொழில்நுட்பம்) படிப்பில் 20 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். ஒசூரில் உள்ள கல்லூரியில் பி.டெக். (பிபிடி-கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) படிப்பில் 20 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

No comments: