பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவர்கள் பட்டய, பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
நடப்புக் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர்களில் 1,173 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் 1,176 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகளுக்கும் முதல்வரின் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்று, ஜாதிச் சான்று, இப்போது படிக்கும் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட படிப்பதற்கான சான்றுகளின் நகல்களுடன் அவர்கள் பிளஸ் 2 பயின்ற மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரை உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment