Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 16 July 2014

அண்ணாமலைப் பல்கலையில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு 1 கோடி 54 லட்சம் உதவித்தொகை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக தமிழகஅரசு திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவியர்கள் 1025 பேருக்கு 1 கோடியே 53 லட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டைட்டல் பார்க் அரங்கில் தமிழகஅரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதல் தலைமுறை பட்டாதரி மாணவ, மாணவியர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் வள்ளலார் அறக்கட்டளை, ராமசாமி படையாச்சியார் அறக்கட்டளை உதவித்தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா தலைமை வகித்து முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவியர்களுக்கு உதவித்தொகையினையும், வள்ளலார் மற்றும் ராமசாமி படையாச்சியார் அறக்கட்டளை சார்பில் 256 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.2500 வீதம் ரூ.6,40,000 தொகையினை வழங்கிப் பேசினார்.
அவர் பேசியது:
அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் முதல் தலைமுறை பட்டதாரிகள் 1150 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.1 கோடி 66 லட்சம் நிதியை ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ரூ.2.3 லட்சம் வீதமும், பல் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதமும், பிஇ மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வீதமும், பிஎஸ்சி விவசாயம் ரூ 5600 என்ற விகிதத்தில் 1025 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற்று மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார். அவர் பேசியது: பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம். தற்போது மிகசிறந்த சிறப்பினை பெற்றுள்ளது. குறிப்பாக வசதி படைத்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் கல்வி பெற முடியும் என்ற நிலை மாற்றப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயிலும் கிடைக்கப் பெற்று மிகச்சிறப்பை பெற்றுளஅளது. மேலும் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா கடும் முயற்சி செய்து தமிழகஅரசு முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தனி அரசாணை மூலம் பெற்று தந்துள்ளார். மாணவர்களின் குடும்ப சூழலில் இந்த தொகை மிக உதவியாக இருக்கும். காலத்தில் செய்யும் இந்த உதவியை மறக்காமல் நன்றாக படித்து பல்கலைக்கழகத்தின் சிறப்பை மேலும் உயர்த்த வேண்டும் என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

No comments: