Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 10 June 2014

TNEA: பொறியியல் படிப்புக்கு நாளை ரேண்டம் எண்: 1.70 லட்சம் மாணவர்களுக்கு ஒதுக்கீடு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1.70 லட்சம் மாணவர்களுக்கு நாளை ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.
இந்த ஆண்டு பொறியில் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ரேண்டம் எண் கணினி மூலம் புதன்கிழமை (ஜூன் 11) காலை 9.45 மணிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ரேண்டம் எண் என்பது கணினியால் இஷ்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 10 இலக்க எண் ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மார்க் பெறும் பட்சத்தில் முன்னுரிமை அளிக்கும் ஒதுக்கீட்டில் கடைசி வாய்ப்பாக ரேண்டம் எண் வரும். ஒரே கட் ஆப் மார்க் பிரச்சினை வரும் போது, முதலில் கணித மதிப்பெண் பார்க்கப்படும்.

ரேண்டம் எண்
ஒருவேளை அதுவும் சமமாக இருந்தால் இயற்பியல் மதிப்பெண்ணை பார்ப்பார்கள். அதுவும் ஒரே மதிப்பெண்ணாக வந்தால் மாணவரின் 4-வது விருப்பப் பாட மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். ஒருவேளை அதுவும் சமமாக இருந்தால் பிறந்த தேதி பார்க்கப்படும். யார் வயதில் மூத்தவரோ அவருக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
மிகவும் அரிதாக அதுவும் ஒரே மாதிரியாக இருந்தால் 10 இலக்கம் கொண்ட ரேண்டம் எண் மதிப்பை பார்ப்பார்கள். அதிக மதிப்பு கொண்ட ரேண்டம் எண் பெற்ற மாணவருக்கு கவுன்சலிங்கில் முன்னுரிமை அளிப் பார்கள். ரேண்டம் எண் ஒருபோதும் ஒரே எண்ணாக இருக்காது. காரணம் வெவ்வேறு மதிப்பு கொண்ட இந்த 10 இலக்க எண், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கணினி மூலம் ஒதுக்கப்படும். யாருக்கு எந்த எண் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியாது.
இணையதளத்தில் அறியலாம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன் கிழமை காலை 9.45 மணிக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் முன்னிலையில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.
மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் (www.annauniv.edu) தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரேண்டம் எண்ணை அறிந்துகொள்ளலாம். இதைத் தொடர்ந்து மாணவர்களின் ரேங்க் பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, கவுன்சலிங் 23-ம் தேதி தொடங்குகிறது.

No comments: