மத்திய அரசின் சமூகநீதித் துறை அமைச்சகம் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யாருக்கு கிடைக்கும்: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். AIEEE நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எத்தனை பேருக்கு; 1000 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
எவ்வளவு: படிப்பு காலம் முழுமைக்கும் தேவையான கல்விக்கட்டணம், தங்குமிடக் கட்டணம், கணினி மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான கட்டணம் ஆகியவை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க: கல்லூரியில் சேர்ந்த பின்பு, கல்லூரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு edistrict.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment