தலைநகர் வலயம் நொய்டாவில் உள்ள தேசிய திறந்தவெளி பள்ளியின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன.
இதுகுறித்து தேசிய திறந்தவெளி பள்ளி இயக்குநர் (மதிப்பீடு) சி. தருமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஏப்ரல்-2014ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மாணவர்கள் 62,211 பேரும் மாணவிகள் 30,489 பேரும் என மொத்தம் 92,700 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் தேசிய திறந்தவெளி பள்ளி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் (18001809393) தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தேசிய திறந்தவெளிப் பள்ளியின் மண்டல மையங்களில் பெற்று கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவே மறு மதிப்பீடு செய்யும் வசதிகளும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, அக்டோபர்- 2014 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் கட்டணங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு மாணவ, மாணவிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment