சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள 838 இடங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள 16 ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் தன்பாத் ஐ.எஸ்.எம். உள்ளிட்டவற்றில் 9,784 இடங்களுக்கான தேர்வு முடிவுகள் இம்மாதம் 19ம் தேதி வெளியாகிறது.
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் ஐ.ஐ.டி. மற்றும் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள இந்திய கனிமவளப்பள்ளி (ஐ.எஸ்.எம்.,) ஆகியவற்றில் மாணவர்கள் சேர்க்கை ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.
மத்திய இடை நிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யால் இத்தேர்வு, ஜே.இ.இ. மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது. ஏப்ரல் மாதம் மெயின் தேர்வு நடத்தப்பட்டு, அதில் 1.5 லட்சம் பேர் தேர்வாகினர். தொடர்ந்து மே 25ம் தேதி அட்வான்ஸ்டு தேர்வு நடந்தது. தேர்வு முடிந்ததும், இம்மாதம் முதல் தேதி, இத்தேர்விற்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், விடையில் ஏதேனும் மாற்றம் இருப்பின் இணையதளம் மூலம் தெரிவித்து, திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் இம்மாதம் 19ம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் ஐ.ஐ.டி.க்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்தாண்டு, 16 ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் தன்பாத் ஐ.எஸ்.எம். ஆகியவற்றில் 9,784 இடங்கள் உள்ளன. இதில், சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் 838 இடங்கள் உள்ளன.
No comments:
Post a Comment