Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 9 June 2014

ஒவ்வொரு மாநிலத்திலும் இ-நூலகம் - பிரணாப் முகர்ஜி உரை

ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ.ஐ.டி.,களும், ஐ.ஐ.எம்.,களும் ஏற்படுத்தப்படும். மேலும், தேசிய இ-நூலகமும் ஏற்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் கூறியதாவது: புதிய மத்திய அரசின் கல்வித் திட்டங்கள் குறித்து அவர் பேசியதாவது,  நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், தேசிய இ-நூலகமும் ஏற்படுத்தப்படும்.

இந்தியாவின் நீண்ட நெடிய வரலாறு, பண்பாடு மற்றும் கலைகள் ஆகியவற்றின் பெட்டகமாக நமது நாட்டு மொழிகள் திகழ்கின்றன.
எனவே, e- bhasha எனப்படும் ஒரு அமைப்பை அரசாங்கம் ஏற்படுத்தும். இதன்மூலம் பிராந்திய மொழிகள் மேம்படுத்தப்பட்டு, அதன் பரவல் செழுமைப்படுத்தப்படும்.

Himalayan studies என்ற நோக்கத்திற்காக ஒரு மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
நானோடெக்னாலஜி, ஸ்டெம் செல் மற்றும் மூளை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, உலகத்தரத்திலான ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.
மேலும், கிராமப்புற மேம்பாட்டிற்காக, ஒரு தொழில்நுட்ப கல்வி மையமும் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

No comments: