Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 6 June 2014

அதிகரிக்கும் காலி பணியிடங்கள் - கூடுதல் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு!

"ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் இடங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்" என ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வான - டி.இ.டி., தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தேர்வுப் பணியை, டி.ஆர்.பி., வேகப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வந்து கொண்டிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது. இதுகுறித்து, அந்த வட்டாரம் கூறியதாவது: துறை வாரியாக, ஆசிரியர் காலி பணியிடங்களை ஏற்கனவே பெற்றுள்ளோம். 
பாட வாரியாக, எத்தனை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பதையும், கணக்கு எடுத்துள்ளோம். இந்நிலையில், பல துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வருகின்றன.

எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்தால்தான் பாட வாரியாக, தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர் எண்ணிக்கை தெரியவரும். கூடுதல் இடங்கள் வரவால், தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
ஆசிரியர் பணி வழங்குவதில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்பின், மாநகராட்சிகள், வனத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கும், ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மேற்கண்ட துறைகளில் இருந்துதான், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வருவதாக கூறப்படுகிறது.

No comments: