பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்விற்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகத்தின் WWW.ANNAUNIV.EDU என்ற இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர்கள் ஒரே CUT OFF மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களை வரிசைப்படுத்த முதலில் கணிதம், இயற்பியல், வேதியியல், நான்காம் விருப்பப்பாடம் ஆகியவற்றில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் பார்க்கப்படும். அதிலும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் பிறந்த தேதி பார்க்கப்படும். அதுவும் ஒன்றாக இருந்தால் இந்த ரேண்டம் எண்ணைப் பயன்படுத்தி மாணவர்கள் வரிசைப்படுத்தப்படுவர். வரும் ஜூன் 27ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்புப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்றும், சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் குறித்து விவரங்களும் அன்றைக்கே தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 9ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரேண்டம் எண் என்றால் என்ன?
மருத்துவம் மற்றும் பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாக, ரேண்டம் எண் எனப்படும் சுழற்சி எண் வெளியிடப்படுகிறது.
ரேண்டம் எண் என்றால் என்ன? இந்த எண் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
ரேண்டம் எண் என்றால் என்ன? இந்த எண் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வுக்கு முன்னதாக, இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் தரவரிசை செய்யபடுவர். பொறியியல் படிப்பை பொறுத்தவரை, இடஒதுக்கீட்டிற்குப் பிறகும், பலர் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்கள் எடுத்திருந்தால், முதலில் கணிதப் பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும் அப்பொழுதும் அதிகம் பேர் ஒரே கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று இருந்தால், பிறகு இயற்பியல், அடுத்து வேதியியல் மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். இதிலும் பலர் ஒன்றுபட்டு இருந்தால் பிறந்த தேதி மூலம் யார் மூத்தவர் என பார்க்கப்படும். இதிலும் பலர் ஒன்றுபட்டு இருந்தால், அப்போதுதான் இந்த ரேண்டம் எண்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கையில் பல மாணவர்கள் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணை பெற்றிருந்தால், அவர்களை தரவரிசைப்படுத்த, உயிரியியல் பாடத்தில் யார் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பது பார்க்கப்படும். பிறகு இயற்பியல், அடுத்து வேதியியல் மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். இதிலும் பலர் ஒன்றுபட்டு இருந்தால் பிறந்த தேதி மூலம் யார் மூத்தவர் என பார்க்கப்படும். இதிலும் பலர் ஒன்றுபட்டு இருந்தால், அப்போதுதான் இந்த ரேண்டம் எண்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
No comments:
Post a Comment