Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 13 June 2014

பேச்சிப்பாறையில் தோட்டக் கலை பட்டயப்படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் ஜூன் 16 இல் தொடங்குகிறது

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையத்திலுள்ள கல்லூரியில்    தோட்டக் கலை பட்டயப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 16 ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து இக்கல்லூரி  முதல்வர் ஆர். கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறையில், நிகழ் கல்வியாண்டிற்கான தோட்டக் கலை பட்டயப்படிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.  மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வரும் ஜூன் 16 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பேச்சிப்பாறை தோட்டக் கலை ஆராய்ச்சி நிலைய வளாகத்திலுள்ள தோட்டக் கலை கல்லூரியில் பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்ப படிவ  கட்டணம் ரூ. 200 ஆகும்.  எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ஜாதி சான்றிதழ் நகலுடன் ரூ. 100 செலுத்தி  விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளலாம். பட்டயப் படிப்பில் சேர பிளஸ் 2 வில் உயிரியல் பாடம் அடங்கிய கணித பாடப் பிரிவு, அறிவியல் பாடப்பிரிவு அல்லது விவசாய பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முதல்வர் (வேளாண்மை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை 641 003 என்ற முகவரிக்கு ஜூலை மாதம் 12 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  இது குறித்து கூடுதல் தகவல் பெற விருப்புவோர் 04651-281191, 281192 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments: