Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 13 June 2014

தமிழகம் முழுவதும் நாளை விஏஓ தேர்வு: 10 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வுக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தேர்வு மையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுடன் தேர்வாணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் காலியாகவுள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனையில்,  தேர்வு மையங்கள் உருவாக்கம், அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறியப்பட்டன என்றார்.
வி.ஏ.ஓ. தேர்வை எழுத 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இந்தத் தேர்வை எழுத மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வி.ஏ.ஓ. தேர்வை எழுதி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: