Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 15 May 2014

TRB-TET: சான்றிதழ் சரிபார்ப்பில் 1000 பேர் பங்கேற்கவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29,518 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

அதன் பிறகு, இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகையையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 17 ஆயிரத்து 996 பேருக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் தாளில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 25,196 பேருக்கு மே 6 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
முதல் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 411 பேரும், இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 598 பேரும் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தாலும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துள்ளது. இதையடுத்து, புதிதாக வெயிட்டேஜ் வழங்கும் முறையை அரசு அறிவித்த பிறகே ஆசிரியர் நியமனம் இருக்கும் என தெரிகிறது.

No comments: