Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 23 May 2014

SSLC தேர்வு முடிவால் மன உளைச்சலா? அழையுங்கள் "104"க்கு

தேர்வு முடிவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள், பெற்றோர், "104" மருத்துவ உதவிக்கு தொடர்பு கொண்டால், தேவையான ஆலோசனைகள் கிடைக்கும்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டாலோ, தேர்ச்சி பெறாவிட்டாலோ, மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, தவறான முடிவு எடுப்பது வழக்கமாக உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபோதும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தன.

நல்ல மதிப்பெண் எடுத்தும் படிக்க வழியில்லையே என தற்கொலை செய்து கொண்டோரும் உண்டு. போதிய விழிப்புணர்வு இல்லாததும், சரியான வழிகாட்டல் இல்லாததுமே இதற்கு காரணம். இதுபோன்றோர் "104"ஐ தொடர்பு கொண்டால், நல்ல மனநிலை பெற முடியும்.
இதுகுறித்து, "104" சேவைத் திட்ட செயல் இயக்குனர் பிரபுதாஸ் கூறுகையில், "மதிப்பெண் குறைவால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புண்டு. பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும்; மாணவர்களை திட்டாமல், தேற்ற வேண்டும். முடியாவிட்டால் 104க்கு அழையுங்கள். வாழ்வில் ஜெயிக்க உள்ள ஏராளமான வாய்ப்புகள் குறித்து "கவுன்சிலிங்" தருகிறோம்" என்றார்.

No comments: