வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி கரோலஸ் லின்னேயஸ் 1707-ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். உயிரினங்களை, தாவர மற்றும் விலங்கினங்களாகப் பிரித்து இரண்டுலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் காரோலஸ் லின்னேயஸ். இவரின் வகைப்பாட்டு முறை செயற்கை வகைப்பாட்டு முறைக்கு உதாரணமாகும். இவர் சிஸ்டெமா நேச்சுரே, ஸ்பீசிஸ் பிளேண்ட்டோரம், ஃப்ளோரா லப்போனிக்கா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
ஜான் டி ராக்ஃபெல்லர் மறைந்த தினம்
பெட்ரோலியச் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்க தொழிலதிபர் ஜான் டி ராக்ஃபெல்லர் 1937-ம் ஆண்டு இதே நாளில்தான் மறைந்தார். மோட்டார் வாகனங்களின் சந்தை வேகமாக வளர்ந்து வந்த காலத்தில், ஸ்டான்டர்டு ஆயில் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய ராக்ஃபெல்லர், அடிமை முறை ஒழிப்பிற்கும் குரல் கொடுத்தவர்.
ஆயில் நிறுவனத்தின் மூலம் ஈட்டிய பெரும் வருவாயினால், அமெரிக்காவின் முதல் கோடீஸ்வரரான இவர், 1914-ம் ஆண்டு ராக்ஃபெல்லர் அறக்கட்டளையைத் தொடங்கினார். இதுவே அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதல் அறக்கட்டளை ஆகும்.
சிகாகோ பல்கலைக் கழகம், ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம் ஆகியவற்றை நிறுவி கல்வியாளராகவும் திகழ்ந்த ராக்ஃபெல்லர் 1937-ம் ஆண்டு இதே நாளில்தான் மறைந்தார்.
உலக கடல் ஆமைகள் பாதுகாப்பு தினம்
உலக கடல் ஆமைகள் பாதுகாப்பு தினம் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடல் ஆமைகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும்,இயற்கைச் சூழலாலும், மனிதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களினாலும் கடல் ஆமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment