JEE அட்வான்ஸ் நுழைவுத்தேர்வின் கீ-அன்சர் ஜூன் 1ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.
மத்திய அரசு பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (ஜே.இ.இ.) மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருகிறது.
2014-15 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு 99 மையங்களில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
இதற்கான கீ-அன்சர் ஜூன் 1ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஜூன் 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
விடைத்தாள்கள் www.cbse.in, www.jeemain.nic.in ஆகிய இணையதளங்களில் கீ-அன்சர் வெளியிடப்படும். இதை மாணவர்கள் ஆய்வு செய்து மாற்றங்கள் இருக்குமானால் அவை குறித்த விவரத்தை இணையதளம் மூலம் தெரிவித்து திருத்தம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment