நாட்டின் மேம்பாட்டிற்காக தரமான கல்வியை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) துணைத் தலைவர் எச்.தேவராஜ் தெரிவித்தார்.
ஃப்ராண்டியர் லைஃப் லைன் மருத்துவமனையின் 10-ஆவது ஆண்டு விழா சென்னையை அடுத்த இலவூரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேவராஜ் பேசியது:
கல்வியைப் பொருத்தவரை தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்றைய காலத்தில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.டெக் பட்டதாரிகளுக்கு குறைவில்லை. ஆனால், ஒரு தச்சுத் தொழிலாளியைக் கண்டுபிடிப்பதுதான் இப்போது சிரமம். எனவே, தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு பல கோடி நிதியை கல்விக்காக செலவழித்துள்ளது. இன்னும் செலவழிக்கத் தயாராகவும் உள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது என்றார் தேவராஜ்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சாந்தாராம், நடிகைகள் அமலாபால், லீமா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment