Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 22 May 2014

அரசு ஊழியர்களின் விடுமுறையைக் குறைக்கக் கோரி வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

ஒரு ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் பணிபுரிவதாகவும், சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி விடுமுறை நாட்களை குறைக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

பொது நலன் மனுவில், அரசு ஊழியர்கள் சனி, ஞாயிறு என 104 நாட்களும், தேசிய மற்றும் பிற விடுமுறைகள் 18ம், தற்செயல் விடுப்பு 15ம், ஈட்டிய விடுப்பு 15ம், மருத்துவ விடுப்பு 12 என மொத்தமாக ஒரு ஆண்டுக்கு 164 நாட்கள் விடுமுறை எடுக்கின்றனர். அதன்படி பார்த்தால் அவர்கள் ஆண்டுக்கு 196 நாட்கள் தான் பணியாற்றுகின்றனர்.
இது குறித்து 2008ஆம் ஆண்டு சம்பளக் கமிஷன் பரிந்துரையில், அரசு அலுவலகங்களில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும். விடுமுறையை 2 முதல் 8 நாட்களாக கட்டுப்படுத்த வேண்டும். தேசிய விடுமுறை (குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி) நாட்களின் போது மட்டும், அரசு அலுவலகங்கள் மூடப்பட வேண்டும் என பரிந்துரைத்தது என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த மதுரைக் கிளை நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

No comments: