அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் மாணவ சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக கலை, பண்பாட்டு துறையின் கீழ் மாமல்லபுரத்தில் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மரபு கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகிய பிரிவுகளில், நான்கு ஆண்டுகள் இளையர் பட்டக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் சேர்க்கப்படுவர். தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில், நடப்பு கல்வியாண்டு (2014-15) சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பாடப்பிரிவுகள்
* தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக்கலை பட்டம் (பிடெக்.)
தகுதி: கணித பாடத்துடன், பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி.
* கவின்கலை இளையர் மரபு சிற்பக் கலை பட்டம் (பி.எப்.ஏ.)
(கற்சிற்பம், சுதைச்சிற்பம், மரச்சிற்பம், உலோகச்சிற்பம் ஆகிய பிரிவுகள்)
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி.
* கவின்கலை இளையர் மரபு ஓவியம், வண்ணம் பட்டம் (பி.எப்.ஏ.)
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி.
விண்ணப்பதாரர்கள், வரும் ஜூலை மாதம் 1ம் தேதி 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்; ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு, வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்ப கட்டணம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு 50 ரூபாய்; பிற வகுப்பினருக்கு 100 ரூபாய்; முதல்வர் பெயரில், திருக்கழுக்குன்றம், பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க வரைவோலையை, கல்லூரி அலுவலகத்தில் நேரில் செலுத்தியோ, 10 ரூபாய் மதிப்பிற்கு அஞ்சல்தலை ஒட்டி, சுய முகவரியிட்ட அஞ்சல் உறையை அனுப்பியோ, விண்ணப்பம் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் பெற இறுதிநாள்: 30.06.14
தொடர்புக்கு: முதல்வர், அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி, மாமல்லபுரம். தொலைபேசி: 044 - 2744 2261. இணையதளம்: http://artandculture.tn.gov.in
No comments:
Post a Comment