பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவது குறித்த இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் தேசிய திறன் வளர்ப்பு மையத்தின் லாரஸ் எஜுடெக் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் 99410 11133, 89405 61793 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதமுள்ள படிப்புகள் குறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மே 25-ஆம் தேதி வரை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த இலவச சேவையைப் பெற முடியும்.
ஆட்டோமொபைல், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், அழகு மற்றும் உடல் நல மேம்பாடு, மின்சாரப் பழுது நீக்கும் பணி, சில்லறை விற்பனை, குளிர்சாதனப் பெட்டிகள் சார்ந்த தொழில் நுட்பம் போன்ற 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான குறுகிய மற்றும் நீண்ட காலப் பயிற்சிகள் கற்றுத் தரப்படும். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 93 பயிற்சி மையங்களை மத்திய அரசின் உதவியுடன் லாரஸ் எஜுடெக் நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment