இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜியின் முன்னோடியான ராஷ் பிஹாரி போஸ் 1886-ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் பர்துவான் மாவட்டத்தில் உள்ள சுபல்தகா கிராமத்தில் இதே நாளில் பிறந்தார். 1905-ம் ஆண்டு வங்க பிரிவினை, ராஷ்பிஹாரி போஸை கதர் மற்றும் யுகாந்தர் இயக்கம் போன்ற பல்வேறு புரட்சி இயக்கத்தினருடன் தொடர்பு கொள்ள வைத்தது. ஆனால், புரட்சி நடவடிக்கைகளை ஆங்கிலேய அரசு நசுக்கியதை அடுத்து ஜப்பானுக்கு தப்பிச் சென்றார் போஸ்.
1942-ல், போரின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தர, படைக்குத் தலைமை தாங்க வருமாறு நேதாஜிக்கு அழைப்பு விடுத்தார். நாடு கடந்து சென்ற பின்பும், தனது இறுதி மூச்சு வரை இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் ராஷ் பிஹாரி போஸ்.
எரிக் சாதனை படைத்த நாள்
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டை அடைந்த ஒரே பார்வையற்ற வீரர் என்ற சாதனையை எரிக் வெய்ஹென்மேயர் 2001-ம் ஆண்டு இதே நாளில்தான் படைத்தார். பேச்சாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகம் கொண்ட எரிக், கிளிமஞ்சாரோ, மெக்கென்லி, அக்கன்ககுவா உள்ளிட்ட உலகின் மிக உயர்ந்த 7 சிகரங்களையும் எட்டி சாதனை படைத்தவர்.
No comments:
Post a Comment