1857-ல் முகலாயர்களின் கடைசி மன்னனான பஹதூர் ஷா ஸாஃபர் இந்திய மன்னராக முடி சூட்டப்பட்ட தினம். 1837-ல் முகலாய மன்னாராக ஜாஃபர் பதவிக்கு வந்தாலும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தால் செங்கோட்டையைத் தாண்டி அவர் அதிகாரம் செலுத்த முடியவில்லை.
1857-ல் சிப்பாய்க் கலகத்தின்போது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக நானா சாஹேப், ஜான்சி ராணி, தாந்தியா தோபே போன்றோர் ஒன்றிணைந்து போரிட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லியை கைப்பற்றிய சிப்பாய்கள், பின்னர், 1857-ம் ஆண்டு இதே நாள் பஹதூர் ஷா ஜாஃபரை இந்திய மன்னராக முடி சூட்டினர். முகலாய மன்னரின் தலைமையில் சிப்பாய்க் கலத்தில் ஈடுபட்டவர்கள் போராட முடிவெடுத்த தினம் இன்று.
ஜே.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்
ஜே.கே. என அழைக்கப்படும் இந்திய தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் இன்று. 1895-ல் சென்னை மாகாணத்தில் இருந்த மதனப்பள்ளியில் பிறந்த ஜே.கே, இந்திய மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்திய ஜே.கே, தி பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஃப்ரீடம், கிருஷ்ணமூர்த்தியின் குறிப்புகள் போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார். அன்றாட வாழ்வில் தமக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம், மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறியவர்.
உலக செவிலியர் தினம்
உலக செவிலியர் தினம் கொண்டாடக் காரணமான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் இன்று. 1820-ல் இத்தாலியின் ஃப்ளாரன்ஸில் பிறந்த நைட்டிங்கேல், நவீன செவிலியியல் முறையை உருவாக்கியவர். 1853-ல் கிரைமிய போரின்போது, காயமடைந்த வீரர்களுக்கு இரவு நேரத்தில்கூட கையில் விளக்குடன் சென்று ஓய்வின்றி மருந்துவ உதவிகள் செய்தவர்.
இதனாலேயே கைவிளக்கேந்திய காரிகை என்று நைட்டிங்கேல் அழைக்கப்படுகிறார். செவிலிகளுக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலில் துவங்கினார். பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை ஆகியவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம், அனைத்துத் செவிலிக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் நைட்டிங்கேல். இவரின் பிறந்த தினம் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment