அன்னையர் தினம்,
தேசிய தொழில்நுட்ப தினம்,
பாப் மார்லே இறந்த தினம்.
அன்னையர் தினம்,
தாய்மையைப் போற்றும் அன்னையர் தினம் இன்று. உலகெங்கிலும் அன்னையர் தினம் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகின்றன. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வந்த அன்னையர் தினம், இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய தொழில்நுட்ப தினம்
பொக்ரானில் 1998-ஆம் ஆண்டு இதே நாள் ஆபரேஷன் சக்தி மூலம் இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்திய நாள். மேலும், உள்நாட்டு தயாரிப்பில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட ஹன்சா-3 விமானம் பெங்களூருவில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இதே நாளில் தான் திரிசூல் ஏவுகணையும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த வெற்றிகளைக் கொண்டாடும் விதமாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாள் "தேசிய தொழில்நுட்ப நாள்" ஆகக் கொண்டாடப்படுகிறது.
பாப் மார்லே இறந்த தினம்
ரெகே இசையின் முடிசூடா மன்னனான ராபர்ட் நெஸ்டா மார்லே இறந்த தினம் இன்று. ஜமைக்காவில் பிறந்த மார்லே, ஆப்ரிக்க மக்களின் சுதந்திரத்தையும், உரிமையையும் இசையின் மூலம் பரப்பியவர். மார்லேயின், நோ உமன் நோ க்ரை(NO WOMEN NO CRY), அயர்ன்(IRON), ஒன் லவ்(ONE LOVE) போன்ற ஆல்பங்கள் உலக பிரசித்து பெற்று, ரசிகர்களின் மனதில் அவரை சிம்மாசனமிட்டு அமரச் செய்தன. தனது இறுதிக்காலம் வரை ஆப்ரிக்கர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பாப் மார்லே, தன்னுடைய 36-வது வயதில், 1981-ல் இதே நாள் உயிரிழந்தார்.
No comments:
Post a Comment